‘ராஞ்சானா’, ‘அட்ராங்கி ரே’ படங்களைத் தொடர்ந்து, ஆனந்த் எல் ராய், தனுஷ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து உருவாக்கி வரும் புதிய திரைப்படம் ‘தேரே இஸ்க் மெயின்’.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே பல கட்டங்களாக டில்லி மற்றும் பனாரஸ் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக கிரித்தி சனோன் நடித்துவருகிறார். இந்த படம் ஒரு காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. பெரும்பாலான காட்சிகள் கல்லூரிப் பின்னணியில் நடைபெறும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக இதே கூட்டணியில் ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘வேங்கை’, ‘அசுரன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘ராயன்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.