நடிகர் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய நண்பரும், லவ் டுடே படத்தில் உதவி இயக்குநருமாக பணியாற்றிய ரமேஷ்க்கு பரிசாக கார் வாங்கிக் கொடுத்துள்ளார். இது மட்டும் இல்லாமல், காரைக் கொடுக்கும்போது, ” சிறப்பான வேலை செய்து வருகிறீர்கள். உங்களது விஸ்வாசத்துக்கு எனது சிறிய அன்புப் பரிசு. இது தொடக்கம் தான். நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கு. ரொம்பவும் நன்றி, லவ் யூ” என்று சொல்லி ஒரு முத்தமும் கொடுத்து காரை அன்பளிப்பாக கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.


