ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று நடிகர் பிரபு தனது மனைவி புனிதாவுடன் வந்தார். அவர்கள் கோவிலில் விநாயகர், சாமி, அம்பாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தனர்.அவருடன் சிவாஜி மன்ற நிர்வாகிகள் தேவதாஸ், பால்ராஜ், சீனி, கவுன்சிலர் முகேஷ் குமார், கோவில் பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கோவிலுக்கு வந்த நடிகர் பிரபுவுடன் ஏராளமான பக்தர்கள், கோவில் பணியாளர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
