லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பென்ஸ்’. இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார், இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த ‘விக்ரம்’, ‘கைதி’, ‘லியோ’ போன்ற படங்களைப் போலவே, ‘பென்ஸ்’ திரைப்படமும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் (LCU) உடன் இணைகிறது. இதனால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிகர் நிவின் பாலி நடிக்கவுள்ளார் என்பதை ஒரு விடியோவின் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், நிவின் பாலி இப்படத்தில் ‘வால்டர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.