நட்டி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘கம்பி கட்ன கதை’. ராஜநாதன் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீ ரஞ்சினி, சிங்கம்புலி, ஜாவா சுந்தரேசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நட்டி போலி சாமியாராக நடித்துள்ளார். படம் குறித்து இயக்குனர் ராஜநாதன் கூறியதாவது: “போலி சாமியார், காமெடி, ஏமாற்று வேலை — இந்த மூன்று வேலையும் யாரால் செய்ய முடியும் என்று யோசித்தபோது உடனடியாக எங்கள் மனதில் நட்டி வந்தார். அவரைத் தவிர இதைச் சிறப்பாக செய்ய யாராலும் முடியாது என்பதால் அவரை போராடி நடிக்க வைத்தோம்” என்றார்.
நட்டி கூறும்போது, “சினிமாவில் எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க தயாராக இருக்க வேண்டும். அதுபோலவே நான் செய்கிறேன். போலி சாமியாராக நடிக்க எந்த தயக்கமும் இல்லை. அதன்மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது என்பது மகிழ்ச்சி. என்னை பொறுத்தவரை சினிமாவுக்காக எதையும் செய்யலாம்; தொடர்ந்து முழு உழைப்பையும் சினிமாவுக்கு தருவேன் என தெரிவித்துள்ளார்.