பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் சோபிதா துலிபாலா. ஆனால், அதன் பிறகு எந்தத் தமிழ் படங்களிலும் நடிக்காமல், தற்போது பாலிவுட் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நடிகர் நாக சைதன்யா ரேஸ் கார்களை ஓட்ட கூடியவர். தற்போது, அவர் தனது மனைவி சோபிதாவுக்கு கார் ரேஸ் பயிற்சி அளித்து வருகிறார். இதனுடன் தொடர்புடைய புகைப்படங்களை சோபிதா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஒரு பெரிய விளம்பரமோ, அறிவிப்போ இல்லாமல், வெளிநாட்டில் தனது மனைவிக்கு கார் ரேஸ் பயிற்சி அளிக்கிறார் நாக சைதன்யா. திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்த சோபிதா, தற்போது பெண்களுக்கான கார் ரேஸ் போட்டியில் பங்கேற்று சாதனை படைக்க முடிவு செய்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.