ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவை நடிகர் மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டியுள்ளார். மேலும், “ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிச்சா உன் கல்யாணத்துக்கு 100 பவுன் நகை போடறேன்” என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். இதற்கிடையில், கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி பரிசுத்தொகையும், வீடும் வழங்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


