Touring Talkies
100% Cinema

Tuesday, November 4, 2025

Touring Talkies

ஏழாவது முறையாக கேரள அரசின் திரைப்பட விருதை வென்று சாதனை படைத்த நடிகர் மம்மூட்டி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் மம்முட்டி, தமிழிலும் பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். மவுனம் சம்மதம், அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா, அரசியல், மறுமலர்ச்சி, ஆனந்தம், பேரன்பு உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின்‌ மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த நடிகருக்கான விருதை மம்முட்டி வென்றுள்ளார். இதன் மூலம் மம்முட்டி தொடர்ந்து ஏழாவது முறையாக மாநில விருதை வென்று சாதனை படைத்துள்ளார். பிரம்மயுகம் திரைப்படத்திற்காக இம்முறை சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.

மம்முட்டி இதற்கு முன்பாக 1984, 1989, 1993, 2004, 2009 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். கடைசியாக, 2023ஆம் ஆண்டு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்திற்காக அவர் சிறந்த நடிகராக தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News