Touring Talkies
100% Cinema

Saturday, October 4, 2025

Touring Talkies

நடிகர் கிஷோர் மற்றும் டிடிஎஃப் வாசன் நடிப்பில் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஐ.பி.எல்’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கிஷோர், டிடிஎஃப் வாசன், அபிராமி, ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் ‛ஐபிஎல்’ (இந்தியன் பீனல் லா). அரசியல் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தை ராதா ஃபிலிம் இன்டர்நேஷனலின் சார்பில் ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார். வெற்றிமாறன் மற்றும் மணிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கருணாகரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இத்திரைப்படத்துக்கு எஸ். பிச்சுமணி ஒளிப்பதிவு செய்திருக்க, அஷ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தின் மையக்கருத்தைப் பற்றி இயக்குநர் கருணாகரன் கூறும்போது, “நம்முடைய நாட்டில் நடக்கும் சில குற்றச்செயல்கள் செய்தித்தாள்களில் வரும், ஆனால் சில நாட்களில் மக்கள் அதை மறந்துவிடுகிறார்கள். அவ்வாறான சில சம்பவங்களுக்குப் பின்னால் வெளியில் தெரியாத அரசியல் காரணங்கள் உள்ளன. அந்த அரசியல் சூழ்ச்சிகளால் அடிக்கடி சாதாரண மனிதர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

அப்படிப்பட்ட சூழலில், செய்யாத தவறுக்கு ஒரு குடும்பம் அரசியல் சூழ்ச்சியால் எப்படி பாதிக்கப்படுகிறது? அப்போதும் அவர்கள் அதிலிருந்து மீள என்ன செய்கிறார்கள்? என்பதே இப்படத்தின் கதை. படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது, ஆனால் இரண்டு பாடல்கள் மட்டுமே எடுக்க பாக்கி உள்ளது. ஜனவரி மாதத்தில் படத்தை வெளியிடும் திட்டத்தில் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

- Advertisement -

Read more

Local News