நடிகர் கதிர், ‘மதயானை கூட்டம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கிருமி’, ‘விக்ரம் வேதா’ போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும், நடிகர் விஜயுடன் இணைந்து ‘பிகில்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பில் வெளியான ‘சுழல்’ வெப் தொடரும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், அவர் மலையாள சினிமாவில் ‘மீஷா’ எனும் மலையாளப் படம் மூலம் அறிமுகமாகிறார். இந்தப் படத்தை எம்சி ஜோசப் இயக்கியுள்ளார். இதில் டைம் ஷாம் சாக்கோ, ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மீஷா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதனுடன், ‘ஆர்.டி.எக்ஸ்’ பட இயக்குநர் நகாஷ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்’ என்ற புதிய திரைப்படத்திலும் கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.