முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோவில் குறிப்பிடத்தக்கது. இது, சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது.
இவ்விடத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். மேலும், பல திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ஜீவா, நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவரை கோவில் நிர்வாகம் வரவேற்றது. தரிசனம் முடிந்த பிறகு, வெளியே வந்த ஜீவாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களுடன் புகைப்படம் எடுத்து, பின்னர் நடிகர் ஜீவா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பிளாக் திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.