தமிழில் பார்க்கிங் மற்றும் லப்பர்பந்து போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்த நடிகர் ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான டீசல் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது ஹரிஷ் கல்யாண் தனது 15வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லிப்ட் பட இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கி வருகிறார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கதாநாயகியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். மலையாள நடிகர் செம்பியான் வினோத் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த புதிய படத்திற்கு தாஷமக்கான் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பை டைட்டில் ப்ரோமோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஹரிஷ் கல்யாண் சில காட்சிகளில் ஆக்ஷன் தோற்றத்திலும், மேலும் சில காட்சிகளில் ராப் பாடகராகவும் காட்சியளிக்கிறார். மேலும் அவரது ஹேர் ஸ்டைல், ஃபிட்னா லுக் என வித்தியாசமான அவரது தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

