ஆசிய கோப்பை தொடர் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய தடுமாறிய நிலையில் ஒற்றை ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற திலக் வர்மாவை நடிகர் சிரஞ்சீவி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். ‘மன சங்கர வர பிரசாத் காரு’ என்ற படப்பிடிப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகை நயன்தாரா, இயக்குநர் அநில் ரவிபுடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
