தெலுங்கு திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான பிரம்மானந்தம், கையில் விநாயகர் சிலையை தாங்கியபடி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிறப்பான விஷயம் என்னவெனில், அந்த சிலையை அவர் தனது கையாலேயே உருவாக்கியிருக்கிறார்.

இதுகுறித்து பிரம்மானந்தம் கூறியதாவது, நான் எப்போது விநாயகர் சிலை உருவாக்கத் தொடங்கினேன் என்று எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால், எப்போதிலிருந்து நினைவிருக்கிறதோ அப்போதிலிருந்தே இந்தக் கலையை செய்து கொண்டிருக்கிறேன்.
என் சொந்தக் கைகளால் உருவம் கொடுத்து விநாயகர் சிலையை செய்வது எனக்கு மிகவும் தனிப்பட்ட உணர்வை தருகிறது. சிலை உருவான நாளிலிருந்து எங்கள் வீட்டில் பண்டிகை களைகட்டத் தொடங்குகிறது” என தெரிவித்துள்ளார்.