Touring Talkies
100% Cinema

Wednesday, November 19, 2025

Touring Talkies

ரஜினிக்கு நடிப்பு பயிற்சி கொடுத்த ஆசிரியர் கோபாலியின் மறைவு… அவருடனான நினைவுகள் குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர் போஸ் வெங்கட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்டு வந்த திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினிகாந்த், முதல் சிரஞ்சீவி வரை பலரும் நடிப்பு பயிற்சியை பெற்றிருக்கிறார்கள். அங்கே நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்த கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி, சமீபத்தில் காலமானார். மறைந்த கோபாலி, இயக்குநர் கே.பாலசந்தரிடம் ரஜினியை அறிமுகம் செய்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோபாலி அவர்களின் மறைவு குறித்தும், கோபாலியிடம்‌ பயின்ற அனுபவங்கள் குறித்தும் நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில்,

‘கோபாலி’ என்கிற நாராயனசாமி. என் வாத்தியார்..1997 ல் நான் ஆட்டோ ஓட்டுனராக இருந்த நேரம்..  ஆட்டோ ஓட்டும்போதும் உலகத் திரைப்படங்களை பார்க்கும் பழக்கம் இருந்தது..  அப்போது உட்லண்ட்ஸ், சத்யம்.  பிலிம்சேம்ம்பரில் ஒரே நேரத்தில் படங்கள் ஓடும்..  அப்படி படம் பார்க்கும் போது, சேம்பரில் ஒரு ஹங்கேரியன் படம் பார்க்க சென்றிருந்தேன்.அருகிள் ஒரு பெரியவர், படத்தை ரசித்து பார்துக்கொண்டிருந்தார்.. பல இடங்களில் சிரிக்கவும் செய்தார்.மொழி புரியாத நான் அவரை பின் தொடர்ந்தேன்.அவர் சிரித்தால் நானும் சிரிப்பேன்..படம் முடிந்த்ததும் என்னிடம் கேட்டார். புரிந்ததா என்று, இல்லை என்றேன்.. பின்பு எப்படி சிரித்தாய் என கேட்டார்.. உங்களை பின் தொடர்ந்தேன் என்றேன். என்ன ஆசை எதற்காக சென்னை வந்தாய் என கேட்டார். நடிகனாக வேண்டும் என்றேன், சிரித்துவிட்டு சென்றுவிட்டார்.

நான் தியேட்டரை விட்டு சற்று தூரத்தில் ஆட்டோவை நிறுத்தியிருந்தேன்.. கலர் சட்டையை மாற்றி காக்கி சட்டையை அணிந்து சவாரிக்கு காத்திருந்தேன்.. ஆட்டோ வருமா?  திரும்பி பார்த்தேன்,, என் அருகில் படம் பார்த்த அவர்.. ஆட்டோ ஓட்டுகிறாயா?   ஆமாம் .. தி நகர் போகனும்..       ம்.. என்று கூட்டிச்சென்றேன்..  ஒரு பெரிய வீட்டருகே நிருத்தச்சொன்னார் .. அதான் அவர் வீடு,     பணம் கொடுத்தவர் என்னிடம் உள்ளே வா, ஒரு காபி சாப்பிட்டுவிட்டு போகலாம் என்றார்.. தயங்கியபடி, சரி என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றேன்.. பெரிய ஆச்சாரமான அய்யர் வீடு.. நான் தயங்கியபடி நின்றேன்.. அவர் என்னை பார்த்து வா என்று சொல்லி,,, நடு வீட்டிற்குள், பூஜையறைக்குகே கூட்டிச்சென்றார்.. கும்பிட்டுக்கோ.. நீ பெரிய நடிகனா வருவ.. என்றார்.. எனக்கொன்றும் புரியவில்லை.. பின்பு அவர் சொன்னது.. நான் கோபாலி.. தூர்தர்சன் முன்னாள் இயக்குனர்., dfa வந்தபொழுது முதல் நடிப்புக்கான ஆசிரியர்..  (film chamber)  ரஜினிகாந்த், சிரஞ்ஞீவி, சீனிவாசன்(மலையாளம்) போன்றோருக்கு நான் தான் ஆசிரியர்.. பாலச்சந்தரிடம் ரஜினியை முதலில் அறிமுகப்படுத்தியவன் என்றார்.. ஆடிப்போய்விட்டேன்.நாளையிலிருந்து தினமும் நீயும் வா. , வந்து படி என்றார்.ஒன்றும் புரியாதவனாய் வீடு வந்தேன். 

மறுதினம் 100 ரூபாய் மற்றும் வெற்றிலை பாக்கோடு சென்றேன். என் படிப்பு தொடங்கியது. ஆட்டோவும் ஓடடிக்கொண்டு  படிப்பையும் தொடர்ந்தேன்.. அம்மா (அவர் மனைவி)பெரும்பாலும் என்னை சாப்பிடாமல் அனுப்பமாட்டார்.. ஜோசியரிடம் என்னை கூடடிச்செல்வார்.. பெரிய நடிகனாவானா என்று ஆவளுடன் கேட்பார்..  அவர் ஆசைப்படி நடிகனானேன்., அதில் பல திருத்தங்கள் செய்தார்.. நல்ல நடிகன் என்ற பெயர் பெற்றேன்.. (சில வருடம் கழித்து நான் கொடுத்த அதே 100 ரூபாயை எனக்கு gift ஆக கொடுத்தார்) அபேர்பட்ட நல்ல மனிதன்..   என் சினிமா புகழ் அனைத்தும் என் ஆசான் கோபலி காலடியில்..  இன்று இயற்கை எய்திவிட்டார் என் ஆசான்.. அவர் அடிக்கடி எனக்கு சொல்லும் வேதம் எல்லாருக்கும் சோறு போடு..  நிச்சயமாக என் குருவே.. நிச்சயமாக செய்கிறேன்.. (ரஜினி சார் மீது பெரிய அன்பு வைத்திருந்தார்.. இன்று அந்த அன்பிற்காக அஞசலி செலுத்த வந்த  ரஜினி சாருக்கு கோடி நன்றிகள்)  உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் குருவே.. என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News