நடிகர் பாபி சிம்ஹா இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, தனது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் பாபி சிம்ஹா சாமி தரிசனம் செய்தார். இதன்பின், அங்கு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


