நடிகர் பரத், ஹீரோ கதாப்பாத்திரங்களை மட்டுமின்றி, மற்ற நடிகர்களின் படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். சமுத்திரகனியுடன் “வீர வணக்கம்” படத்தில் நடித்திருக்கும் அவர், அடுத்ததாக சசிகுமாருடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். குடும்ப உறவுகளின் வலிமையை வலியுறுத்தும் விதமாக உருவாகும் இந்தப் படத்தில், மேகா செட்டி மற்றும் மாளவிகா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். இவர்களுடன் எம். எஸ். பாஸ்கர், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இந்துமதி ஜோ மல்லூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படத்தை குரு இயக்குகிறார், மேலும் இதற்கான பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் 10ஆம் தேதி பட்டுக்கோட்டையில் தொடங்க உள்ளது. படப்பிடிப்பு பணிகள் பட்டுக்கோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரணியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.