Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

விலையுயர்ந்த கார்-ஐ இசையமைப்பாளர் தமன்-க்கு பரிசளித்த நடிகர் பாலய்யா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்குத் திரைப்பட உலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் தமன். தமிழிலும் அவர் அவ்வப்போது இசையமைத்து வருகிறார். தற்போது “இதயம் முரளி” படத்திற்காக இசையமைப்பதோடு மட்டுமின்றி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அவர் இசையமைத்துள்ள அடுத்த தமிழ்ப் படம் “சப்தம்”, பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த “அகண்டா, வீர சிம்மா ரெட்டி, பகவந்த் கேசரி, டாகு மாகராஜ்” போன்ற படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் தமன், தற்போது “அகண்டா 2” படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

தன்னுடைய படங்களுக்கு சிறப்பான, அதிரடியான இசையை வழங்கி வரும் தமனை பாராட்டும் வகையில், பாலகிருஷ்ணா அவருக்கு ஒரு “போர்சே” காரை பரிசாக வழங்கியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News