நடிகர் பாலய்யாவின் 50 வருட திரையுலக பயணத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக இங்கிலாந்தில் உள்ள வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இவர் பெயரும் தற்போது இடம் பிடித்துள்ளது. இந்த புத்தகத்தில் இடம்பெறும் முதல் தெலுங்கு நடிகரும் இவரே. இது குறித்த தகவலை வெளியிட்டுள்ள வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சிஇஓ சந்தோஷ் சுக்லா கூறும்போது, “தெலுங்கு சினிமாவில் ஐந்து தலைமுறைக்கான நீண்ட பங்களிப்பை தந்து லட்சக்கணக்கானோருக்கான இன்ஸ்பிரேஷனாக பாலகிருஷ்ணா இருக்கிறார். அவரது இந்த பயணம் என்பது இந்திய மற்றும் குளோபல் சினிமாவில் ஒரு தங்க முத்திரையாக பதிந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
