Wednesday, February 5, 2025

நடிகர் ஏ.வி.எம். ராஜனின் மனைவியும், பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா (87) காலமானார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஏ.வி.எம். ராஜனின் மனைவியும், பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா (87) காலமானார்.1961ஆம் ஆண்டு வெளியான கொங்கு நாட்டு தங்கம் திரைப்படத்தின் மூலம், நடிகையாக திரையுலகிற்கு அறிமுகமானார் புஷ்பலதா. அதன் பிறகு, அந்நாளைய முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

நானும் ஒரு பெண் திரைப்படத்தில் ஏ.வி.எம். ராஜனுடன் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் காதல் மலர்ந்தது.இதனால், அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். மேலும், சகலகலா வல்லவன், நான் அடிமை இல்லை போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

சென்னையில் வசித்து வந்த அவருக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நிலை குறைந்தது. இதற்கிடையில், தனது 87வது வயதில், நேற்று (பிப்ரவரி 4) மரணமடைந்தார். அவருடைய மறைவிற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News