Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

திரு.மாணிக்கம் படத்தை பார்த்துவிட்டு மனம் நெகிழ்ந்து பாராட்டிய நடிகர் ஆர்யா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரு மாணிக்கம் திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியானது. சமுத்திரக்கனியுடன் அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். பாடல்களை சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

நடிகர் ஆர்யா இப்படத்தை பார்த்து தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “இயக்குநர் நந்தா பெரியசாமி ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். படத்தில் உள்ள உணர்ச்சிகள், நடிகர்களின் நடிப்பு, வசனங்கள் அனைத்தும் மிகவும் பிரமாதமாக இருந்தது. திரைப்படத்தின் இறுதிவரை உணர்ச்சி முக்கியமாக கையாளப்பட்டுள்ளது. திரைக்கதையின் அமைப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. சமுத்திரக்கனி அவர்கள் திரு மாணிக்கம் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்  என்றுள்ளார். .

- Advertisement -

Read more

Local News