இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். அதற்கு இணையாக, ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
சமீபத்தில், ‘வணங்கான்’ படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியானது. இது ரசிகர்களிடையே வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், நடிகர் அருண் விஜய் செய்தியாளர்களை சந்தித்த போது, ‘வணங்கான்’ மற்றும் இயக்குநர் பாலா பற்றிய விவரங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது,இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகியுள்ளது. இன்றைய தலைமுறைக்கு இயக்குநர் பாலா என்றால் யார் என்பதை ‘வணங்கான்’ மூலம் புரிய வைக்கும். இது எதார்த்தமான கதை கொண்ட திரைப்படமாகும். பாலா சார் ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான தாக்கத்தை உருவாக்குவார், இதுவும் அதே போல அசரடிக்கும் ஒரு படமாக இருக்கும். பாலா சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறியது.”
மேலும், “இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். இதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இயக்குநர் பாலா அவருடைய தனித்துவமான கதை சொல்லும் முறை மற்றும் காட்சியமைப்புகளுடன் இப்படத்தை உருவாக்கி, என்னுடைய கேரியரில் முக்கியமான படமாக மாற்றியுள்ளார்” என்றும் அவர் கூறினார்.