‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு தொடர்ந்து தனக்கு பிடித்தமான கார் பந்தயத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித். துபாய், உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த சர்வதேச கார் பந்தயங்களில் அவரின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி முதல் மூன்று இடங்களுக்குள் வென்று சாதித்துள்ளது. இந்த நிலையில், எஸ்.ஆர்.ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் இந்த ஆண்டின் ‘ஜென்டில்மேன் டிரைவர்’ விருது வழங்கியுள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற இந்த விருது விழாவுக்கு குடும்பத்துடன் சென்று விருதினைப் பெற்றுக் கொண்டார் அஜித்.


