அருவி மற்றும் வாழ் போன்ற படங்களில் நடித்திருந்த பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வந்த இவரை, வீட்டில் இருந்த சில பெண்கள் இவரின் கேரக்டர் சரியில்லை என்று கூறி குற்றம்சாட்டினர். அதன் பின், பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதனால் கோபமடைந்த பிரதீப்பின் ஆதரவாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், பிரதீப் ஆண்டனி மற்றும் அவரது காதலி பூஜா சக்தி ஆகியோருக்கான நிச்சயதார்த்தம் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி நடைபெற்றது. இன்று, கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக இவர்களின் திருமணம் நடந்தது. இந்த ஜோடி கடந்த நான்கு ஆண்டுகளாக காதலிப்பதில் உறுதியாய் இருந்து வந்தனர்.
தற்போது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து, ரசிகர்கள், நண்பர்கள், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பிரதீப் ஆண்டனிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.