Touring Talkies
100% Cinema

Wednesday, March 26, 2025

Touring Talkies

நடிகரும் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதிராஜா உடல்நல குறைவால் காலமானார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. இவரது மகன் மனோஜ் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு ‘தாஜ்மஹால்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தின் மூலம் தனது மகன் மனோஜ் பாரதிராஜாவை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மனோஜ் “சமுத்திரம்”, “கடல் பூக்கள்”, “ஈரநிலம்”, “அன்னகொடி”, “ஈஸ்வரன்”, “மாநாடு”, “விருமன்” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரங்கள் அனைத்தும் சிறப்பான கவனத்தை ரசிகர்களிடம் பெற்றன. மேலும், கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான “மார்கழி திங்கள்” என்ற திரைப்படத்தையும் மனோஜ் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் மனோஜ் பாரதிராஜாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோஜ் பாரதிராஜா (வயது 48), மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News