தெலுங்கு முன்னணி நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அந்தவகையில் மலையாள முன்னணி நடிகர் நிவின்பாலி பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருந்தார். நிவின்பாலியின் இந்த வாழ்த்துக்கு பதில் அளித்துள்ள பவன் கல்யாண், “உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி…எப்பொழுதுமே நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு மிக ஆழமாக உயிர் கொடுப்பதை நான் பாராட்டுகிறேன். குறிப்பாக ஓம் சாந்தி ஒசானா மற்றும் பிரேமம் ஆகிய படங்கள் என்று கூறியுள்ளார்.
