நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். துபாயில் நடைபெறும் ’24எச்’ ரேஸில், அஜித் தலைமையிலான ‛அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்றுள்ளது. இதற்கிடையில், நேற்று (ஜனவரி 11) திடீரென அஜித் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து அஜித்தின் ரேஸிங் அணியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‛‛பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்து, உடல் நலன் மற்றும் அணியின் நலனைக் கருத்தில் கொண்டு, துபாய் 24H கார் ரேஸில் இருந்து அஜித் விலகுவது என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர் அணியின் உரிமையாளராக மட்டுமின்றி, இப்போட்டியில் 414 கார்-ஐ இயக்குவது மட்டுமின்றி ஜிடி4 தொடரில் பங்கேற்பார் என குறிப்பிடப்பட்டது.
அஜித் அணி தொடர்ந்து ரேஸில் போட்டியிடும்” என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், இன்று (ஜனவரி 12) நடைபெற்ற போட்டியில், அஜித்குமாரின் அணி போர்ஷ்சே 992 கப் கார் (எண் 901) ரேஸில் 3வது இடம் பிடித்து அசத்தியது. ஒட்டுமொத்த தொடரில் அவர்கள் 23வது இடத்தை பிடித்தனர். மேலும், ஜிடி4 பிரிவில் ‛ஸ்பிரிட் ஆப் தி ரேஸ்’ (Spirit of the race) எனும் விருதும் அணிக்கு வழங்கப்பட்டது. வெற்றி பெற்றதும், இந்திய தேசியக் கொடியுடன் ரசிகர்களை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அஜித்.
அத்துடன், வெற்றி பெற்ற அணிகளை கௌரவப்படுத்தும் விழாவில், நமது தேசியக் கொடியுடன் மேடையேறினார்.அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்ததை அடுத்து, அவரது ரசிகர்கள் அதிரடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.