நடிகர் அஜித்குமார் தற்போது தனது கார் ரேசிங் பயணத்தில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். அவரின் “அஜித் குமார் ரேசிங்” அணி, கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, அக்டோபர் மாதம் வரை தொடர்ந்து நடைபெறும் 24 மணி நேர endurance கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்கிறது. இந்த போட்டிக்காக, அஜித் மற்றும் அவரது அணி பல்வேறு நாடுகளை பயணித்து, போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.



தற்போது, அஜித்தின் அணி இத்தாலியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், அஜித் உலகப் புகழ்பெற்ற Ferrari கார் நிறுவனத்தின் அருங்காட்சியகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

அஜித் குமார் இந்தப் போட்டிக்காக பல்வேறு நாடுகளுக்குச் செல்வது, அணியுடன் இணைந்து பயணிப்பது, போட்டிகளில் சாதனைகள் நிகழ்த்துவது போன்ற விஷயங்களை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தொடர்ந்து அப்டேட் செய்து வருகின்றார். அஜித் ரசிகர்கள், அவரின் கார் ரேசிங் பயணத்தினை உற்சாகத்துடன் எதிர்நோக்கி வருகிறார்கள்.