தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பிரபலங்களுக்குத் தேசிய அளவிலான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் நடிகர் அஜித் குமார், பரதநாட்டிய கலைஞரும் நடிகையுமான ஷோபனா சந்திரகுமார் மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதற்குட்பட்டவையாகவே, தமிழகத்தைச் சேர்ந்த வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதுகளுக்குத் தேர்வானார்கள்.

இதனையடுத்து, வரும் மாத இறுதியில் டெல்லியில் நடைபெற உள்ள பத்ம விருது வழங்கும் விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களின் கையால் நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படவிருக்கிறது.
பத்மபூஷன் விருதுகளைப் பெற்ற தமிழர்கள்:
19 பேருக்குப் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதில், மூவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 1. நல்லி குப்புசாமி , 2. நடிகர் அஜித் குமார் – கலைத் துறையில்,3. சோபனா சந்திரசேகர்