திருப்பதியில் இன்று அதிகாலை சுப்ரபாத தரிசனம் செய்தார் நடிகர் அஜித் குமார்.அவர் வந்தபோது, அருகில் வரிசையில் நின்றிருந்த சிலர் “தல தல” என்று கூச்சலிட்டனர்.அதற்கு அஜித் அமைதியாக “இது கோயில், அப்படி செய்யக் கூடாது” என்று சைகை செய்து, அவர்களை அமைதியாக இருக்கச் சொன்னார்.

அதேபோல், காது கேளாத நபர் ஒருவர் செல்ஃபி கேட்க, அஜித் அவரது போனை எடுத்துக்கொண்டு தனது கையால் செல்ஃபி எடுத்து கொடுத்தார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த வாரம், பாலக்காடு அருகே தனது குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார் அஜித். அதனைத் தொடர்ந்து இப்போது திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

