நடிகர் அஜித் சினிமாவில் மட்டும் அல்லாமல், மோட்டார் மற்றும் கார் பந்தயங்களில் கூட அதிக ஆர்வம் கொண்டவர். கார்கள் மீது இருக்கும் அவருடைய காதல் காரணமாக, உலகின் சிறந்த பிராண்டுகளின் கார்களை வாங்குவதை அவர் ஒரு பழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது அவரிடம் உலக அளவில் பிரபலமான 10-க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன.

லம்போர்கினி ஜி.டி., மெக்லாரன் சென்னா, பெராரி எஸ்.எப்.90, போர்ஷே ஜி.டி.3 ஆர்.எஸ்., பி.எம்.டபிள்யூ 740 எல்.ஐ., மெர்சிடிஸ் பென்ஸ் 350 ஜி.எல்.எஸ்., பெராரி 458 இத்தாலியா, ஹோண்டா அக்கார்டு வி6 போன்ற உலகின் அதிநவீன வசதிகள் கொண்ட வேகமான, விலை உயர்ந்த சொகுசு கார்கள் அனைத்தும் அஜித்திடம் உள்ளன. ஆனால் அவரிடம் போர்டு கார் மட்டும் இல்லாமல் இருந்தது.
இப்போது அந்தக் குறையை நிறைவேற்றும் வகையில் அஜித் போர்டு எப்150 ஜீரோ டிரக் மாடல் காரை வாங்கியுள்ளார். இந்தக் காரில் 3500 சிசி என்ஜின் மற்றும் 300 பி.எச்.பி. பவரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. மேலும் 87 லிட்டர் எரிபொருள் தொட்டி, 10 கியர்களுடன், ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடிற்காக பல்வேறு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அஜித் தற்போது வாங்கியுள்ள இந்த போர்டு எப்150 காரின் விலை ரூ.1.10 கோடி எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.