தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என நடிகர் சசிகுமார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் மற்றும் லிஜோமோல் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பிரீடம்’ திரைப்படம் வரும் ஜூலை 10ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சசிகுமார், வெளிநாடுகளில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. தமிழை பேசும் மக்கள் மற்ற நாடுகளிலிருந்து வந்திருந்தாலும், அவர்கள் இங்கிருந்தே எப்போதாவது சென்றவர்களாகவே இருப்பார்கள் என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என நடிகர் சசிகுமார் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.