விஷால் வெங்கட் இயக்கியுள்ள பாம் என்ற திரைப்படத்தில் காளி வெங்கட் பிணமாக நடித்துள்ளார். இப்படத்தில் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடித்தாலும், கதையின் மையம் முழுவதும் பிணமாக இருக்கும் காளி வெங்கட்டைச் சுற்றியே நகர்கிறது. இப்படத்தின் டிரெய்லரும் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைப் பற்றிக் காளி வெங்கட் கூறுகையில், *“எவ்வளவு கோடி பணம் இருந்தாலும், யாரும் பிணமாக இருக்க சம்மதிப்பதில்லை. அப்படிப்பட்ட புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் யாரும் முன்வர மாட்டார்கள். ஆனால் அது ஒரு கலைஞனுக்கே கிடைக்கும் பாக்கியம். பாம் படத்தில் நான் பல நாட்கள் பிணமாக நடித்தேன். என்னைச் சுற்றி மற்றவர்கள் அழுவது, என்ன நடக்கிறது என்பதையெல்லாம் அந்த தோற்றத்தில் நான் நேரில் கண்டேன்.
சில காட்சிகளில், ஹீரோ அர்ஜூன் தாஸ் என்னைத் தூக்கிச் சுமப்பார். நாமோ வெயிட்டாக இருப்பதால், ஹீரோ கஷ்டப்படுகிறார் என்று எனக்கு உணர்வு ஏற்பட்டது. அதேபோல் ஒரு காட்சியில் ஹீரோயின் ஷிவாத்மிகா ராஜசேகர் (அதாவது போலீஸ் ராஜசேகரின் மகள்) என்னை தூக்கிச் சுமக்க வேண்டியிருந்தது. அந்தக் காட்சியை தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி எடுக்கலாமா என்று யோசித்தோம். ஆனால் அவர், இப்படித்தான் தூக்க வேண்டும் என்று சொல்லி என்னை அசால்ட்டாகத் தூக்கிச் சென்றார். அப்போது நான் மிகவும் மிரண்டுவிட்டேன்”* என்றார்.