Touring Talkies
100% Cinema

Saturday, August 2, 2025

Touring Talkies

இந்த படத்தில் நடித்தது எனக்கு மன அழுத்தத்தை தந்தது… நடிகை மீனாட்சி சவுத்ரி OPEN TALK

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்த திரைப்படம் ‘தி கோட்’. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை தமிழகத்தில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்டார்.

திரைப்படம் வெளியானபிறகு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இது 2024ம் ஆண்டின் மிக அதிகமாக வசூலித்த வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது, விஜய் ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார், இதை எச்.வினோத் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், ‘தி கோட்’ திரைப்படத்தின் கதாநாயகி மீனாட்சி சவுத்ரி சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில், இப்படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்தார். அவர் கூறியதாவது, “கோட்’ படத்தில் நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், நான் நடித்த கதாபாத்திரத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது. இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதன் பிறகு வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் என்னை பெரிதும் பாராட்டினர். அந்தப் படம் என்னை மன அழுத்தத்தில் இருந்து மீள உதவியாக இருந்தது” என்று குறிப்பிட்டார்.

- Advertisement -

Read more

Local News