தமிழ் திரைப்பட உலகில் ஒரு முக்கியமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆரி. ‘நெடுஞ்சாலை’, ‘தரணி’, ‘மாயா’, ‘உன்னோடு கா’, ‘முப்பரிமாணம்’, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் மேலும் மக்களிடையே புகழ் பெற்றார். தற்போது விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் சுனில், ராஜ் தருண், பரத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துவரும் ஆரி சமீபத்திய பேட்டி ஒன்றில், சினிமாவில் முதல் முறையாக காக்கிசட்டை அணிந்து நடிக்கிறேன். இது எனக்கு மிகுந்த உணர்வுப்பூர்வமான அனுபவமாக இருக்கிறது. இந்தக் கதாபாத்திரத்துக்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு, உடல் எடையை குறைத்துள்ளேன். மேலும், பல உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, அவர்களிடம் ஆலோசனைகள் பெற்றேன். மனதளவிலும் இந்த வேடத்திற்கு முழுமையாக தயாராகிவிட்டேன். இந்த படம் சமூகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், ரசிகர்களை கட்டிப்பிடிக்கும் ஒரு படமாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.