தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இதற்கு முன்னர், அவர் சில குறும்படங்களை இயக்கிய அனுபவம் பெற்றுள்ளார்.
தற்போது, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கி வருகிறார். இதில் நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இசையமைப்பாளராக எஸ்.தமன் பணியாற்றும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, சந்தீப் கிஷன் நடிக்கும் சில முக்கிய காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று நடிகர் சந்தீப் கிஷன் தனது 38-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, இந்த திரைப்படக்குழு ஒரு சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.