Touring Talkies
100% Cinema

Sunday, June 22, 2025

Touring Talkies

படப்பிடிப்பில் ஏற்பட்ட சிறிய விபத்தால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பு – நடிகை பிரியங்கா சோப்ரா OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்” என்ற படத்தின் படப்பிடிப்பு போது நடந்த ஒரு சம்பவத்தை நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது பகிர்ந்துள்ளார். ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது, தனது புருவத்தின் ஒரு பகுதியை இழந்தது குறித்து அவர் தெரிவித்தார்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜூலை 2-ஆம் தேதி வெளியாக உள்ள ஆக்ஷன் படமான “ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்” திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்த படத்தின் ஒரு ஆக்ஷன் காட்சி குறித்து பேசும்போது, “ஒரு காட்சியில் மழையில் தரையில் உருண்டு விழவேண்டும். அந்த நேரத்தில் கேமிரா அருகில் வரவேண்டும். கேமரா ஆபரேட்டர் மெதுவாக அதை அருகில் கொண்டு வந்தார். நானும் கொஞ்சம் அருகில் சென்றேன். அப்போது அந்த கேமிரா என் புருவத்தில் மோதி விட்டது. அதனால் புருவத்தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டது,” என பகிர்ந்துள்ளார்.இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News