Saturday, September 21, 2024

ரஜினி சொன்ன சிறுகதை… ஒரு டோபியும்… ஒரு கழுதையும்! #VETTAIYAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். இப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய ரஜினிகாந்த் எப்போதும் போல் ஒரு சிறுகதையை சென்னார். அதில் இயக்குனர் ஞானவேல் அவர்கள் என்னை பார்த்து ஆறிலிருந்து அறுபது வரை படத்தைப் போல் நடிகர் ரஜினியை இந்தப் படத்தில் பார்க்க வேண்டும் என்றார். நான் அவரிடம் இமாச்சல பிரதேசத்தில் நடந்த ஓர் உண்மை கதையைச் சொன்னேன். அங்கே ஒரு ஊரில் ஒரு டோபி இருந்தார். அங்குள்ள ஒரு குளத்தினை கடந்து செல்ல ஒரு கழுதையை பயன்படுத்துவார்கள். அப்படி இருக்கும் சமயத்தில் ஒரு நாள் அந்தக் கழுதை காணாமல் போக அந்த அதிர்ச்சியில் அந்த டோபி எல்லாத்தையும் மறந்துவிடுகிறார். அப்போது அனைவரும் சேர்ந்து அவருக்குக் காவி உடை உடுத்தி அவரை சாமியாராக மாற்றி வழிப்படுகிறார்கள்.

இந்நிலையில் ஒரு நாள் காணாமல் போன கழுதை திரும்பி வருகிறது. மீண்டும் அவருக்கு நினைவு திரும்புகிறது. அப்போது அனைவரும் அந்த டோபியிடம் இப்படியே நாம் இருக்கலாம் என்கிறார்கள். இந்த வாழ்க்கை நன்றாக உள்ளது என்றார்கள். அதேபோல் தான் அந்தப் படங்களின் நீக்க பட்ட காட்சிகளை நீங்கள் பார்க்கவில்லை. ஒரு படத்தில் எஸ்.பி அவர்கள் எனக்கு முதல் நாள் 14 பக்கங்கள் கொண்ட வசனம் கொடுத்தவுடன் நான் பேசமாட்டேன் என்றவாறு சென்றுவிட்டேன். அனைவரும் எவ்வளவு திமிர் என்றார்கள். போனால் போகட்டும் என்றார்கள்.

மீண்டும் எஸ்.பி அவர்கள் என்னை அழைத்து உன்னால் முடிந்ததை செய் என்றார். பேக் ஷாட், டாப் ஆங்கிள் வைத்து எடுத்துக் கொள்கிறேன் என்றார். கமல் அவர்களுக்கு வேறு கதாநாயகியுடன் நடிக்க வைத்தார்கள். அப்போது எனக்கு நாடக நடிகர்களோட நடிக்க வைத்தார்கள். அவ்வாறு வெள்ளை தாடி வைத்து ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் நடித்தேன். தற்போது நல்ல பாதையில் இன்றுவரை போய்கொண்டு இருக்கிறது என்று பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News