தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சீரியல்களில் நடித்து வருபவர் ராகுல் ரவி. சில தெலுங்கு படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது மீண்டும் தமிழ் சின்னத்திரையில் ‘மருமகள்’ என்ற தொடரின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ள அவர், புதிய புராஜெக்ட்டில் தமன்னோவுடன் இணைந்து நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட ராகுல் ரவிக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
