ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், பின்னர் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் பரவலான பிரபலத்தை பெற்றார். சில மாதங்களுக்கு முன்னர், யோகா மாஸ்டர் தவான் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகும், அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வழக்கம்போல் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ரம்யா பாண்டியன்.

அந்த அனுபவத்தில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தன்னை நிலையான அமைதிக்கு கொண்டு சென்றது என்றும், அதே வேளையில் ஒரு சக்தி தன்னை சேர்ந்ததுபோல உணர்ந்தார் என்றும் கூறியுள்ளார்.
இந்த திருவண்ணாமலை கிரிவலப்பாதை போன்ற அபூர்வமான அனுபவம் வேறு எங்கேயும் கிடைக்காது என்றும், இப்பாதையில் தன்னுடன் வந்த ஒருவர், “நீங்கள் ஒரு தேவதை போல, உங்களுடன் இந்த பாதையில் நடப்பது எனக்கு பெரும் அதிர்ஷ்டம்” என்று கூறினார் எனவும், அந்த பதிவில் ரம்யா பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.