இலங்கையில் “ட்ரீம் லைன்” என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஸ்ரீஸ்கந்தராஜா என்பவரால் துவங்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அமீர், ‘லப்பர் பந்து’ பட கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பவா செல்லத்துரை உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிறுவனத்தில் திரைப்படங்களுக்கான பிந்தைய பணிகளை முன்னேற்றுவதற்காக DI, எடிட்டிங், அட்மாஸ் சவுண்ட், மிக்ஸ் பிரிவியூ தியேட்டர், ஃபொலி சவுண்ட்ஸ், டப்பிங் தியேட்டர் ஆகிய அனைத்து வசதிகளும் கொண்ட தொழில்நுட்ப அமைப்புகள் உள்ளன. மேலும், ஏரி அலெக்ஸா SXT கேமரா, அபெச்சர் மற்றும் ஆமரான் லைட்ஸ் போன்ற நவீன ஒளி அமைப்புகள் யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
திரைப்படத்தின் தயாரிப்பிலிருந்து ஒலிக் கலவை மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் இந்த நிறுவனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், பருத்திவீரன் புகழ் இயக்குநர் அமீர், சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பவா செல்லத்துரை, டிராபிக் ராமாசாமி இயக்குநர் விக்கி, ஆவணப்பட இயக்குநர் சோமீதரன், படத்தொகுப்பாளர் அஹமத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.