தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்தவர் ரூபஸ் பார்கர். அமெரிக்காவில் குடியேறி அங்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கிறார். சிறுவயது முதல் சினிமா மீதான தனியாத பற்றின் காரணமாக 2014ல் அமெரிக்காவில் பி2 பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி ஹாலிவுட் படங்களை தயாரித்து வந்தார். கடைசியாக அவர் தயாரித்த படம் ‘சிட்டி ஆப் ட்ரீம்ஸ்’.இந்த படம் அமெரிக்காவில் புலம் பெயர்ந்த குழந்தைத் தொழிலாளர்களுக்கு நடக்கும் மிகப்பெரும் அநீதியை பட்டவர்த்தனமாக வெளிஉலகிற்கு தோலுரித்து காட்டி உள்ளது. லயன்ஸ் கேட்’ என்னும் ஹாலிவுட் வெளியீட்டு நிறுவனத்தின் மூலம், கடந்த ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டு அமெரிக்க மக்கள் மற்றும் ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாக மாறியிருக்கிறது. விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் ஆஸ்கர் அகாடமி லைப்ரரியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த படம் விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ளது.
