இந்திய இசை உலகின் முக்கிய ஆளுமை இளையராஜா, 82 வயதிலும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். 50 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்துள்ள இவர், ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசை அளித்ததுடன், சர்வதேச அளவிலும் சிம்பொனி இசையை நிகழ்த்தியுள்ளார். அவருக்கான பாராட்டு விழாவை அரசு சார்பில் நடத்த வேண்டும் என ரசிகர்களும், திரையுலகினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின், இளையராஜா பிறந்தநாள் ஜூன் 2ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என சட்டசபையில் அறிவித்தார். ஆனால் அது தள்ளிப்போனது. தற்போது வரும் செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும், இந்தியாவின் பல்வேறு பிரபல திரைக்கலைஞர்களும் பங்கேற்கின்றனர். இதுவரை எந்த சினிமா நிகழ்ச்சியிலும் முதல்வர் பங்கேற்காத நிலையில், இளையராஜா விழாவில் அவர் வருவாரா என்பது சஸ்பென்ஸாக உள்ளது.