மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கியுள்ள எம்புரான் படத்தின் ஒரு பகுதி கதை வெளிநாட்டில் நடக்கிறது. அதில் வெளிநாட்டு வில்லனாக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெரோம் பிலைன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்மர் ஸ்டோரி, டு கில் ஏ பிரிஸ்ட். கல்பா, பீஸ்ட், லவ்விங் வின்சென்ட், ஜான் விக் சேப்டர் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சிறந்த சின்னத்திரை நடிகருக்கான பிரிட்டிஷ் அகாடமி விருதையும் வென்றுள்ளார்.
