இலங்கையின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவை பாலிவுட் பிரபல நடிகை வாங்கியுள்ளார்.நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், கடந்த 2012 ஆம் ஆண்டு சுமார் 3.5 கோடிக்கு ரூபாய் மதிப்பில் வாங்கியதாக கூறப்படுகிறது.இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் குமார் சங்கக்காரவின் தனியார் தீவுக்கு அருகில் இந்தத் தீவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தீவு ஆடம்பர ரியல் எஸ்டேட்டுகளுக்கான ஒரு முக்கியமான இடமாக மாறியுள்ளது.
