Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம், போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம். நடிகரின் மகன் மட்டும் நடிகராகக் கூடாதா? – நடிகர் சூர்யா சேதுபதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முதன்முறையாக நானும் ரௌடிதான் படத்தில் ஒரு காட்சி வந்தார். பின்னர் சிந்துபாத் படத்தில் முழுமையாக நடித்தார். அதற்கு பிறகு படிப்பில் கவனம் செலுத்திய இவர் தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கும் ஃபீனிக்ஸ் படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதற்கிடையில், சூர்யா விமர்சனங்களை, கேலிகளை சந்தித்தார். பட பூஜைக்குப் விஜய் சேதுபதி ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு, “நான் வேறு, அப்பா வேறு, அதனால்தான் சூர்யா சேதுபதின்னு போடாம சூர்யா என்று போட்றாங்க என்ற அவரது பதில் கவனத்தைப் பெற்றது.

சமீபத்திய பேட்டியில், அவர் “டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம், போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம். நடிகரின் மகன் மட்டும் நடிகராகக் கூடாதா?” என்று கேள்வி எழுப்பியது குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் விவாதிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

- Advertisement -

Read more

Local News