Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

மார்டன் உடையில் ரம்மியமான போஸ்… லாஸ்லியாவின் ட்ரெண்டிங் கிளிக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை லாஸ்லியா தனது கல்வியை திரிகோணமலையில் முடித்தார். பின்னர், ஐடி துறையில் வேலை செய்யத் தொடங்கினார், ஆனால் அந்த வேலை விடுத்து சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக செயல்பட்டார். இதைத் தொடர்ந்து, குட் மார்னிங் ஸ்ரீலங்கா போன்ற சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் தான், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது அழகிய இலங்கை தமிழ் பேசும் முறையால் பல ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், லாஸ்லியா இரண்டு படங்களில் தொடர்ந்து கமிட்டானார். இதில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்த பிரெண்ட் ஷிப் திரைப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. அதன்பின், மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் படத்தில், பிக்பாஸ் வீட்டில் தன்னுடன் இருந்த தர்ஷனுடன் இணைந்து நடித்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள லாஸ்லியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.6 மில்லியன் பாலோவர்களை வைத்துள்ளார். தற்போதைய நிலையில் பட வாய்ப்புகள் இல்லாததால், லாஸ்லியா உடல் எடையை குறைத்து, கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு, பட வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார். அண்மையில், மார்டன் உடைகளில் அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவர் எடுத்த முயற்சிகள் வீண் போகவில்லை என்பதையும் சொல்ல வேண்டும். தற்போது, “Mr. ஹவுஸ் கீப்பிங்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதில், YouTube பிரபலம் ஹரி பாஸ்கர் ஹீரோவாக நடிக்க, படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

- Advertisement -

Read more

Local News