Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

உலகப்புகழ் பெற்ற மைசூர் தசரா விழாவில் ஏ.ஆர்‌.ரகுமான் மற்றும் இளையராஜாவின் இசைக்கச்சேரியா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா அக்டோபர் 3ம் தேதி தொடங்கி, அக்டோபர் 13ம் தேதி வரை மைசூரு நகரில் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சிகளுடன் இணைந்து ‘யுவ தசரா’ எனும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதில் அக்டோபர் 9ம் தேதி இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரியும், அக்டோபர் 10ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்கச்சேரியும் நடைபெற இருக்கிறது. உட்டனஹள்ளி ரிங் ரோடில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

நாளைய இசை நிகழ்ச்சி குறித்து ஏஆர் ரஹ்மான், “அக்டோபர் 9, தசரா 2024 நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மைசூரு தசரா விழாவில், சாமுண்டீஸ்வரியின் ஆசியுடன் நவராத்திரி விழாவில் முதன்முறையாக பங்கேற்கும் சந்தோஷம் என இளையராஜா கன்னடத்தில் பேசிய வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Read more

Local News