பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இயக்குனர் ஆதித்யா தரின் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில், ரன்வீருடன் சஞ்சய் தத், ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், புதிய தகவலாக 19 வயது நடிகை சாரா அர்ஜுன், இப்படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும், ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள், “ரன்வீர் சிங் நடித்த ‘பேண்ட் பாஜா பாராத்’ படம் வெளியானபோது, சாரா அர்ஜுன் வெறும் 5 வயது குழந்தைதான்!” என்று கூறியதோடு, “19 வயது நடிகையை 39 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க வைப்பது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சாரா அர்ஜுன் தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.