இந்தியளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வருபவர் அனிருத். கடைசியாக, கூலி திரைப்படத்துக்கு இசையமைத்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவர் இசையமைத்துள்ள விக்னேஷ் சிவனின் எல்ஐகே படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே, நடிகர் சிம்பு நடிக்கவுள்ள அரசன் திரைப்படத்தின் டைட்டில் டீசருக்கு தெறிக்கவிடும் பின்னணி இசையைக் கொடுத்திருந்தார். இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், அனிருத் புதிதாக இசை நிறுவனத்தைத் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இசைத்துறைக்கான வணிகம் மிகப்பெரியதாக உள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி இசை நிறுவனங்களில் அனிருத் பாடல்கள் அதிகம் ஸ்டீரிம் ஆகி வருவதால், சொந்தமாகவே ஒரு நிறுவனத்தைத் துவங்கி தன் சினிமா பாடல்களையும் ஆல்பம் பாடல்களையும் வெளியிட அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

